புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கல்

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா கலந்து கொண்டு, மாணவிகள் 147 பேருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்

Update: 2022-08-28 05:30 GMT

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிளை வழங்கிய எம்எல்ஏ  முத்துராஜா

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா கலந்து கொண்டு, மாணவிகள் 147 பேருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலர் சே. மணிவண்ணன் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவின் நிறைவாக தலைமை ஆசிரியர்ச .சுசரிதா நன்றி கூறினார்.இவ்விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News