திருமயம் ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலமாக கிராமப்புற மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

Update: 2022-12-07 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான கட்டிடப்பணிகளுக்கு பூமி பூஜையை நடத்திய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஊராட்சி ஒன்றியம்,துளையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கும்மங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.10.28 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்களை திறந்து வைத்து ரூ.395 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ளதிருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், துளையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கும்மங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்களை திறந்து வைத்து மற்றும் ரூ.395 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணிக்கு  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (07.12.2022) அடிக்கல் நாட்டினார்.

மேலும் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சத்துணவுத் திட்டத்தின்கீழ், துளையானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.32 இலட்சம் செலவிலும் மற்றும் கும்மங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.96 இலட்சம் செலவிலும், புதிதாக கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்களையும்  சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி  திறந்து வைத்தார்.

பின்னர்  அமைச்சர்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  கிராம வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியாகும் என்ற அடிப்படையில் கிராமங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பெருமைக்கொள்ளும் வகையில் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மேலும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்காக திருமயத்தில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்விக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், திருமயம் ஒன்றியக் குழுத் தலைவர் அழ.ராமு, ஒன்றியக் குழு துணைத் தலைவர் மீனாட்சி சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதாசிவம், சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.சிதம்பரம், பி.எல்.ஆர்.பழனிவேலு, சரண்யா, ஊராட்சிமனறத் தலைவர் சிக்கந்தர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Tags:    

Similar News