அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகியால தொழில்பயிற்சி பெற அழைப்பு

வெல்டிங் ஆப்பரேட்டார் , இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற்நுட்பவல்லுநர் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி பெறலாம்

Update: 2022-03-16 03:30 GMT

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்வெல்டிங் ஆப்பரேட்டார் மற்றும் இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற்நுட்பவல்லுநர் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ராமர் வெளியிட்ட தகவல்: தேசிய கல்வி கொள்கை 2020-ன்படி தமிழகத்தில் 46 தொழிற்பயிற்சி நிலையங்கள் Skill Hub -களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டிங் ஆப்பரேட்டார் (Welding Operator) மற்றும் இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற்நுட்பவல்லுநர் (Two Wheeler Service Technician) ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவராகவும் குறைந்த பட்சமாக 14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தபள்ளி கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற பயிற்சியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாயப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இதில் சேர்நது பயன்பெறலாம்.

இதில் சேர விரும்புவோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருக்கோகர்ணம், திருச்சி மெயின் ரோடு, புதுக்கோட்டை நிலைய முதல்வர் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04322-221584 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.எஸ்.ராமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News