புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு

Book Festival - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்

Update: 2022-09-09 06:00 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு -க்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கினர்.

Book Festival - புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு -க்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, நினைவு பரிசு வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 5 -ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை நடைபெற்றது.இப்புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும் வகையில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் குழந்தைகள், ஆன்மீகம், அரசியல், அறிவியல், விருது பெற்ற எழுத்தாளர் களின் படைப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் தினந்தோறும் மாலை வேலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவும் நடைபெற்றது. இப்புத்தகத் திருவிழாவில் புதுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதலாக புத்தகம் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 5 -ஆவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிருவாகத்தை பாராட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு -க்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவு பரிசு வழங்கினார்கள்.மேலும் இப்புத்தகத் திருவிழா சிறப்புற அமைவதற்கு பணியாற்றிய அலுவலர்கள், விழாக் குழுவினர் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் புத்தகங்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன், ம. வீரமுத்து, அ. மணவாளன், மு. கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News