நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில் ரத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை முகாம்

நடைப்பயிற்சியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சக்கரை, ரத்தஅழுத்தம் குறித்த பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது

Update: 2021-08-20 10:07 GMT

புதுக்கோட்டை புதுக் குளத்தில் நடை பயிற்சியாளர் சங்கத்தின் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை புதுக் குளத்தில் நடை பயிற்சியாளர் சங்கம் மற்றும் துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து இலவச ரத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆலோசனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில்,  புதுக்கோட்டை புது குளத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சக்கரை மற்றும் ரத்த அழுத்தம் நோய் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு  மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடைப்பயிற்சியாளர் சங்கத் தலைவர் நைனாமுகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, இருதய சிறப்பு மருத்துவரும், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவருமான மருத்துவர் மாரிமுத்து, நாகரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ ஆலோசனை முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களில், அதிக உடல் சோர்வு உள்ளவர்கள், நாள் முழுவதும் அதிக தண்ணீர் தாகம் உள்ளவர்கள், தசைப்பிடிப்பு உள்ளவர்கள், பசியின்மை உள்ளவர்கள், பசித்தும் உணவில் நாட்டம் இல்லாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள், இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் போக்கினால் தூக்கமின்மை , பாதங்களில் மாறுபட்ட உணர்வு,  உடல் எடை குறைந்தவர்கள், சர்க்கரை நோயால்  உடல் எடை அதிகரித்துள்ளவர்கள், அதிகமுடி உதிர்வு உள்ளவர்கள். பெண்களுக்கு பாதங்களில் வெடிப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவு  ஆகிய  பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News