புதுக்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாள்

புதுக்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-07-15 06:15 GMT

புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்

திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் 68 -ஆவது பிறந்தநாளை அக்கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொண்டாடினர்.

புதுக்கோட்டை நகரில் ரோசா இல்லம் எதிரே மாவட்டத் தலைவர் எம்.ஏ. முகமதுகனி தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட அவைத்தலைவர் வி. ராஜகோபால், துணச்செயலர் கே. மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலர் முகமதுசுல்தான், துணைச்செயலர் வி.எஸ். அன்பரசு, நகரச்செயலர் லக்கிஸ்டார் ஆனந்த், நகர அவைத்தலைவர் எம். ராஜ்குமார், திருமயம் ஒன்றியச்செயலர் புலிவலம் கே. பாண்டி, நகர் மன்ற உறுப்பினர் ராஜாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News