2023 பிப்.4,5,6 -ல் புதுக்கோட்டையில் அஇவிதொ சங்க மாநில மாநாடு

2023 பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில்அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

Update: 2022-09-28 06:30 GMT

கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.லாசர் பேசுகிறார்.

2023 பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் வருகின்ற 2023 பிப்ரவரி 4, 5, 6. தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில தலைவர் ஏ.லாசர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சங்கத்தின் மாநில பொதுச் செயலளார் வீ.அமிர்தலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர் அ.பழநிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

50,000 பேர் பேரணி, பிரனாயி விஜயன் பங்கேற்பு: 

மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக எம்.சின்னதுரை எம்எல்ஏ, செயலாளராக எஸ்.சங்கர், பொருளாளராக கி.ஜெயபாலன் உள்ளிட்ட 101 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும், பல்வேறு உப குழுக்களும் அமைக்கப்பட்டன. மநாட்டையொட்டி பிப்.4 அன்று நடைபெறும் மாபெரும் பேரணி-பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்களை பங்கேற்கச் செய்வது என்றும் பொதுக்கூட்டத்தில் கேரள முலதமைச்சர் பிரனாயிவிஜயன் மற்றும் சங்கத்தின் அகில இந்திய, மாநில தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


Tags:    

Similar News