போக்குவரத்துக்கழக நிர்வாகத்துக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பிய ஏஐடியுசி

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு ஏஐடியுசி சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது

Update: 2022-03-14 10:15 GMT

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28, 29 நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறிவித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் இன்று அனுப்பப்பட்டது

தேசிய பணமயமாக்கல் கொள்கையை கண்டித்து வருகிற மார்ச் 28 ,29 தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஏஐடியுசி சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் இன்று அனுப்பப்பட்டது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் ஏஐடியூசிதொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு வங்கி, மின்சாரம், இன்சுரன்ஸ், போக்குவரத்து, நிலக்கரி, பிஎச்இஎல், இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட மாநில, மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று தேசிய பணமயமாக்கும் கொள்கைகளை கண்டித்தும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பாக குறைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் பிரதான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.  பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட விலை உயர்வை குறைப்பது, ,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிடுவது சாலை போக்குவரத்து சட்டத்தை திரும்பப் பெறுவது. தேசிய நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28,29 தேதிகளில் நடைபெறும் 48 மணி நேர நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தம் நடைபெறுகிறது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் பங்கேற்பதை அறிவித்து  திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் மூலம் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மற்றும் பொது மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ,தொழிலாளர் நல அலுவலர், அரசு போக்குவரத்துத் துறை செயலாளர், தேனாம்பேட்டை தொழிலாளர் நல ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ்  அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News