முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்தநாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான விஜயபாஸ்கரின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இன்று புதுக்கோட்டை அதிமுக நகரமன்ற உறுப்பினரும் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவருமான சேட்டு என்ற அப்துல் ரஹ்மான் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் பிறந்தநாளைக் கொண்டாடினர்.