நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதால் இறக்கவில்லை, அமைச்சர் விஜய பாஸ்கர் பேட்டி

நடிகர் விவேக் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணமடையவில்லை என மருத்துவர்களும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெளிவாக விளக்கிக் கூறி விட்டனர் எனவே அதைப்பற்றி வதந்திகளை யாரும் எழுப்ப வேண்டாம் என்றும் கூறினார்

Update: 2021-04-17 12:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது அதேபோல் அதிமுக திமுக என மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு வேட்பாளர்கள் உடைய பூத் ஏஜெண்டுகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அனுமதி அட்டை வழங்கியுள்ளது.

அவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்று அங்கே உள்ள சிசிடிவி அறையை பார்த்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேவையில்லாமல் ஆட்கள் இருக்கிறார்களா முறையாக பாதுகாக்கப்படுகிறது என அறிந்துகொள்ளலாம்,

அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் மையமான அரசு கல்லூரிக்கு சென்று அங்கே உள்ள சிசிடிவி அறைக்கு சென்று கல்லூரிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டு வெளியே வந்தனர், விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

வாக்கு எண்ணும் மையத்தில் அறைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது, அதனை பார்ப்பதற்காக 6 சட்டமன்ற தொகுதிகள் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று அங்கே உள்ள சிசிடிவி அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் காட்சியை பார்வையிட்டோம் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்,

அதேபோல் தற்போது வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்வதற்கு தேர்தல் நன்னடத்தை விதியின் காரணமாக அது போன்ற பணிகளில் ஈடுபட முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்து வருகிறது,

ஆனாலும் அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி யாக இருப்பது தடுப்பூசி மட்டும் தான்,

எனவே அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் தடுப் பூசியை பற்றி வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், இந்தியா முழுவதும் வைரஸ் தொற்றில் பாதிப்படைந்த நிலையில் எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நிலையில் இருந்து வந்தது.

தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் பல லட்சம் பேர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர் தடுப்பூசியைப் பற்றி யாரும் எந்த கருத்தும் கூற வேண்டாம். தடுப்பூசி பற்றிய வீண் வதந்தியை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கூறினார்,

அதேபோல் தமிழ் நாட்டிற்கு தேவையான அனைத்து மருந்து வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் இன்று காலை தொலை பேசியில் பேசினேன்.

அதேபோல் தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையையும் குறித்து எடுத்துக் கூறினேன் பொது மக்கள் முக கவசம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்து வந்தால் இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மிகப் பெரிய சவாலை சந்திக்கும் ஒரு சூழ்நிலை வந்துவிடும், எனவே அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்

நடிகர் விவேக் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணமடையவில்லை என மருத்துவர்களும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெளிவாக விளக்கிக் கூறி விட்டனர் எனவே அதைப்பற்றி வதந்திகளை யாரும் எழுப்ப வேண்டாம் என்றும் கூறினார்

Tags:    

Similar News