வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டம், வீடு வழங்கும் திட்டம் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தில் ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-03-17 08:00 GMT

.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி, நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும், ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள் கட்டாமல்  ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி இன்று 17.3.2022.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, நெடுங்குடி கிளை செயலாளர் தோழர்.சுசி.கணேசன் தலைமை வகித்தார். விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். போரட்டத்தில் விதொச மாவட்ட பொருளாளர் க.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம், சிபிஐஎம் அரிமளம் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.இராமையா,  மாவட்ட நிர்வாகிகள். எம்.ஜோஷி, செந்தமிழ் செல்வன், அடைக்கன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.அடைக்கப்பன். விதொச நிர்வாகிகள் விளக்கவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விளக்கமளித்தனர்.

Tags:    

Similar News