புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-07-15 06:30 GMT

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்விக்கண் தந்த கர்ம வீரர் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நகரத்தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரைதிவியநாதன், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, நிர்வாகிகள் எம்.ஏ.எம். தீன், ஜி.எஸ். தனபதி, செம்பைமணி, சரவணன், வீரதுரைசிங்கம், சூர்யாபழனியப்பன், ஜெய்சங்கர், கருணாநிதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News