கீழையூரில் 101 மரக்கன்றுகள் நடும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழையூரில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

Update: 2021-04-21 13:15 GMT

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி சாலையில் உள்ள கீழையூரில் மரம் அறக்கட்டளை மற்றும் கீழையூர் சங்கமம்" சார்பாக 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் புதுக்கோட்டை நகர துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் இந்நிகழ்வில் சேர்ந்தாகுடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் வரவேற்புரை வழங்கினார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் அ.க.முத்து, கீழையூர் அம்பலம், தனபால், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு முன்பாக அப்பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து குளக்கரை அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மரம் அறக்கட்டளையின் நிறுவனர் மரம் ராஜா பேசும்போது இந்தப்பகுதி முழுவதையும் பசுமைக்காடாக மாற்றுவதற்கு பத்தாயிரம் மரக்கன்றுகளை வழங்குவதாக அறிவித்தார் தொடர்ந்து இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து இயற்கை காடுகளாக மாற்றி நீங்கள் இந்த மரக்கன்றுகளை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News