தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை காவலர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துமனை பணி செய்யும் காவலர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்காசி, கடையநல்லூர்,செங்கோட்டை மற்றும் சங்கரன்கோவில் ஆகிய அரசு பொது மருத்துவமனைகளில் காவலர்கள் துறை ரீதியாக காயச்சான்று, பிரேத பரிசோதனை போன்ற பணிக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது .
தற்போது தென்காசி மாவட்டத்தில் 60 காவல்துறையினர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது 30 காவலர்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் . அரசு மருத்துவமனைக்கு சென்று வரும்போது கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காக காவலர்களுக்கு பாதுகாப்பு நலன்கருதி அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கவச உடை (PPE Kit) இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணி நிமித்தமாக சென்று வரக்கூடிய காவலர்களுக்கு கவச உடை வழங்கப்பட உள்ளது...