மொடக்குறிச்சி கணபதிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-11-28 12:45 GMT

மொடக்குறிச்சி கணபதி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (நவ.27) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி, நடந்த இந்த முகாமில் காசநோய் பரவும் முறைகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கு உண்டான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, மழைக்கால நோய்கள் அதன் தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், எலிக்காய்ச்சல் மற்றும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.சீனிவாசன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், சுகாதார ஆய்வாளர் மயில்சாமி, செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News