திருநெல்வேலி- 100 குழந்தைகளின் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரணமாக தலா ரூபாய் 500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ரோட்டரி கிளப் மூலம் வழங்கப்பட்டது
திருநெல்வேலி- 100 குழந்தைகளின் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரணமாக தலா ரூபாய் 500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ரோட்டரி கிளப் மூலம் வழங்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தற்காலிகமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வசமுள்ள 100 குழந்தைகளின் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரணமாக தலா ரூபாய் 500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ரோட்டரி கிளப் மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களிடம் செயின்ட் ஆன்ஸ் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ். குழந்தைகள் நல குழுத்தலைவர் சந்திரகுமார், ரோட்டரி கிளப் தலைவர் ஆண்டனி பாபு, ரோட்டரி கிளப் இயக்குனர் பரமசிவன் மற்றும் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
-