சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மே மாதம் 28 ம்தேதி மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கு அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர், இராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார்.
1898-ல் மகாராட்டிராவில் இராண்ட மற்றும் ஐரசட்டு ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவிமுன்பு சபதம் எடுத்தார் என்று கூறப்படுகின்றது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற இயற்பெயர் கொண்ட வீர் சவர்கார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரராகத்தான் தனது வாழ்வைத் துவங்கினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசால் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அந்தமான் செல்லுலார் சிறையில் ௧௯௧௧ ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இந்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததன் காரணமாக 1924 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
அதன் பிறகு அவர் ஹிந்து மகா சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர இந்துத்துவ வாதியானார். மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசீய காங்கிரசின் விடுதலைப்போராட்ட கொள்கைகளை எதிர்த்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகவும் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரிவினையை அனுமதித்த மகாத்மா காந்தி தண்டிக்கப்படவேண்டும் என்று முழங்கினார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்ஸே அவனது கூட்டாளி நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் இவரே மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைதானவர். எனினும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் வணங்க "பதித பவன்" என்ற கோவிலை இரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று ஏற்படுத்தினார். 1937-இலேயே காசுமீர் பிரச்சினை வரும் என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்றும் சீனப்போர் பற்றியும் கூறியிருந்தார். 1943 ஆம் ஆண்டு அவரது 61- ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1963- ஆம் ஆண்டு சாவர்க்கரது மனைவி யமுனாபாய் இறந்தார். அவர் சாவர்க்கருக்கு எல்லா விதத்திலும் துணை நின்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமியை சாவர்க்கர் அழைத்து வந்தபோது அவர் அந்த சிறுமியைக் கவனித்துக் கொண்டார். சாவர்க்கருக்கு இரு குழந்தைகள். அவர்கள் விஸ்வாஸ், பிரபா ஆகியோர்.
1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். இது ஆத்ம ஹத்யா அல்ல, ஆத்ம சமர்ப்பணம் முதலான பல நூல்களை எழுதினார். அவர் இறந்தவுடன் இலட்சம் மக்களுக்கு மேல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்
இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ பாரத சங்கத்தையும்,இலண்டனில் சுதந்திர இந்திய சங்கத்தையும் உருவாக்கினார்.இந்திய விடுதலை இயக்கம்-1857 என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார்.