திருத்தணி- தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளைஞரை தாக்கிய எஸ் ஐ - காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2021-05-27 14:22 GMT

திருத்தணி அருகே தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவலாங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் இவர் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்பு அருகிலுள்ள உணவகத்தில் உணவு வாங்கச் சென்றபோது திருவாலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் அவசரத் தேவை என்றும் பாராமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தோஷ் விசாரிக்காமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு சென்ற வாலிபரை தாக்கிய உதவி ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Similar News