திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லுாரியில் ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியா, ரஷ்யா தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு இணைந்து, ரஷ்ய கலாசார நிகழ்ச்சியை, கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிறுவன வளாகத்தில் நடத்தின.;
திருச்செங்கோடு : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியா, ரஷ்யா தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு இணைந்து, ரஷ்ய கலாசார நிகழ்ச்சியை, கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிறுவன வளாகத்தில் நடத்தின.
துவக்க விழா
இந்நிகழ்ச்சியை ராஜம்மாள் ரங்கசாமி, கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார்.
ரஷ்ய பாரம்பரிய நடனங்கள்
விழாவின் தொடக்கமாக, ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனங்கள், கிராமிய நடனங்கள், ரஷ்ய நெசவாளர்கள், போர் வீரர்கள், விவசாயிகளின் வாழ்க்கை நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வண்ணம் நடனங்கள் அமைந்திருந்தன. நடன நிகழ்ச்சியை ரஷ்யாவை சேர்ந்த ஹெலினா வடிவமைத்தார்.
சீனிவாசன் நினைவுப்பரிசு
கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், ரஷ்ய நாட்டின் நடன கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
பங்கேற்பாளர்கள்
ரஷ்ய கலாசார மைய செயலாளர் தங்கப்பன், ரஷ்ய நடன குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், ரஷ்ய கலாசார மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மற்றும் கல்வி நிறுவனத்தின் முதன்மை திட்ட அலுவலர் பாலுசாமி, கல்லுாரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.