பரமத்திவேலூரில் டேக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம்

பரமத்தி வேலூரில் போலீஸ் துறை சார்பில் டேக்சி. ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-27 03:15 GMT

பரமத்தி வேலூரில், டேக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. போலீஸ் டிஎஸ்பி., ராஜாரணவீரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

அப்போது பேசிய டிஎஸ்பி., ராஜரணவீரன், பகல், இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், டேக்சி மற்றும் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம்செய்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும்.

ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆட்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி வருவதாக தெரியவந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும். மது அருந்திவிட்டு கார், ஆட்டோக்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

திரளான கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News