நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 62 பேர் மனு தாக்கல்

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று 15 பேர் வேட்பு மனு தாக்கல். இதுவரை மொத்தம் 62 பேர் மனு தாக்கல்.

Update: 2022-02-01 15:00 GMT

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்று 15 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 62 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 447 வ õர்டுகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜன.28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இன்று நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 5 நகராட்சிகளுக்கு 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றுவரை மொத்தம் உள்ள 153 வார்டுகளுக்கு 21 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்திற்கு இன்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்திற்கு இன்று ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பரமத்தி டவுன் பஞ்சாயத்திற்கு 2 பேரும், பொத்தனூர் டவுன் பஞ்சாயத்திற்கு ஒருவரும், ப.வேலூர் டவுன் பஞ்சாயத்திற்கு 2 பேரும், வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 9 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News