டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க கோரிக்கை

டயர் ரீட்ரெடிங் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-12-18 06:30 GMT

பட விளக்கம் : நாமக்கல்லில் நடைபெற்ற டயர் ரீட்ரெடிங் நிறுவன உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேசினார்.

டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க கோரிக்கை

நாமக்கல்,

டயர் ரீட்ரெடிங் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலார் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் லோகச்சந்திரன், தர்மலிங்கம், பொருளாளர் மல்லீஸ்வரன், துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு டயர் ரீட்ரெடிங் உரிமையாளர் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தற்போதைய சூழலில், வாகன உரிமையாளர்கள் டயர் ரீட்ரெடிங் செய்வது குறைந்து வருகிறது. இதனால் ரீட்ரெடிங் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு தமிழக அரசு மின் கட்டண சலுகை வழங்கவேண்டும் என கோரி, மின்சாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டயர் ரீட்ரெடிங் தொழிலை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசின் பிஎம்இஜிபி மானியக்கடன் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்க வேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்குவது குறித்து ஆலோனை நடத்தப்பட்டது. திரளான ரீட்ரெடிங் நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News