நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-30 13:15 GMT

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பேசினார்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அடையாள அட்டைகள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் கீதா விளக்கம் அளித்தார். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

மேலும், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. முன்னதாக தொழில் முனைவோராக உள்ள திருநங்கைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டன. நாமக்கல் வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் முருகன், முன்னாள் படைவீரர் நல அலுவலக பயிற்றுனர் கோமன் உள்பட 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News