'தமிழ் மண்வளம்' இணையதளம் மூலம் மண்ணின் வளம் அறியலாம்..!

'தமிழ் மண்வளம்' இணைய தளம் மூலம் மண்ணின் வளம் குறித்து தெரிந்துகொள்ளலாம். விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு.

Update: 2023-09-06 07:45 GMT

விவசாயிகள் மண்வளம் அறிய 'தமிழ் மண்' என்ற  பிரத்யேக இணையதளம்.

நாமக்கல் :

விவசாயிகள், தமிழ் மண்வளம் இணைய தளம் மூலம், தங்கள் தோட்டத்தில் உள்ள மண்ணின் வளம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மண்வள இணையதளம் மூலம் கிராமங்களில் உள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு தேவையான உர பரிந்துரைகளை பெற்று பயன்பெறலாம்.

விவசாயிகள் கம்ப்யூட்டர் மூலமாகவோ அல்லது ஆண்ட்ராய்ட் செல்போன் மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில், லாக் ஆன் செய்து, தமிழ் மண்வளம் இணைய தளத்தை அணுகலாம். இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, விவசாயிகளின் செல்போன் அல்லது கம்ப்யூட்டரில் மண்வள அட்டையாக எலக்ட்ரானிக் வடிவில் கிடைக்கும்.

இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மண்டல வாரியாகவும், மாவட்டத்தில் உள்ள வட்டார வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன. விவசாயிகள் எந்த வகையான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் காடுகள் சார்ந்த பயிர்களை சாகுபடி செய்யலாம் என்ற விவரங்களும், தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளும் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News