பெண் குரலில் பேசி ரூ.5 லட்சம் மோசடி: மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

பெண் குரலில் ரூ. 5 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது, நாமக்கல் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-12 03:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கதிராநல்லூரை சேர்ந்தவர் பாலசந்தர் (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர், மணப்பெண் தேவை என சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பார்த்த ஒருவர், பெண் குரலில், நான் லண்டனில் இருக்கிறேன், உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. எனவே உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் செல்போன், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கலந்துரையாடி வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென ஒருநாள் பாலசந்தரை தொடர்பு கொண்ட அந்த பெண், நான் உங்களை பார்க்க தமிழகத்திற்கு, 2 லட்சம் பவுண்டுடன் வந்தேன். என்னை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்துக் கொண்டனர். உங்களது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வந்திருக்கும் அதை சொல்லுங்கள் என கூறி உள்ளார். அதை உண்மை என நம்பிய பாலசந்தர், ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அப்போது உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 5 லட்சத்தை மர்ம நபர் எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலச்சந்தர், எதிர்முனையில் தன்னிடம் பேசியது பெண் இல்லை மோசடி நபர் என்பதை தெரிந்துகொண்டார்.

இதையொட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வியிடம், பாலசந்தர் புகார் அளித்தார். அதன் பேரில், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News