வெண்ணந்தூரில் சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வெண்ணந்தூரில் சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2024-05-26 09:32 GMT

வெண்ணந்தூரில் சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெண்ணந்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனியார் ஆக்கிரமிப்பு செய்தததைக் கண்டித்து பொதுமக்கள் சால மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்திற்கு உற்பட்ட 4வது வார்டில், சீரங்கன்காடு என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடைப்பகுதி உள்ளது. மழை காலங்களில் இதில் தண்ணீர் செல்லும், மற்ற சமயங்களில் பொதுமக்கள் இதை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இவ்வழியாக வாகனங்களிலும், நடந்தும் சென்று வந்தனர். இந்த நிலையில் தனியார் ஒருவர் இந்த ஓடைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, அவ்வழியாக யாரும் செல்லமுடியாத வகையில் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்தும், ஓடை பகுதியில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக்கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரோட்டின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உடனயாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறியதால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்று கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News