விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக பணிக்குழு

Namakkal news- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தலைமையில், கொமதேக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-17 01:15 GMT

Namakkal news- கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ.,

Namakkal news, Namakkal news today- விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தலைமையில், கொமதேக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வருகிற ஜூலை 10 ஆம் தேதி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு கொமதேக ஆதரவளித்துள்ளது. இதையொட்டி அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தல் களத்தில் கடுமையாக பணியாற்றும்.

இதற்காக நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பணிக்குழு உறுப்பினர்களாக கொமதேக மாநில இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வேலு, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன், சென்னை மாவட்ட செயலாளர் இசை பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள கொமதேக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News