பள்ளிபாளையம் பகுதியில் ரயிலில் தனியாக வந்த பெண்களிடம் நகை பறிப்பு

பள்ளிபாளையம் பகுதியில் ரயிலில் தனியாக செல்லும் பெண்களிடம் நடந்த தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-06-17 11:54 GMT

பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளப்பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் ரயில்கள் வேகம் குறைவாக செல்வதை பயன்படுத்தி பெண்களிடம் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபற்றி ஈரோடு மற்றும் கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே உள்ள வெள்ளி குட்டை என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளங்களில் இணைப்பு பழுதடைந்துள்ளதால் அவற்றை பராமரிக்கும் பணி தற்பொழுது கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் ஆனங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து காவேரி ரயில் நிறுத்தம் வரை பத்து கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வரையிலான மிக குறைந்த வேகத்தில் தான் செல்ல இயலும்.

இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடமிருந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது ரயில் பயணிகளிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கல்யாணி என்ற பெண்ணிடம் 1.5 தங்க செயின் மற்றும் ராய்ச்சூரில் இருந்து ஈரோடு வரை வந்த குர்லா எக்ஸ்பிரஸில் பயணம் செய்த மணிமேகலை என்ற பெண்ணிடம் 1.5 பவுன் தங்கச் செயினும் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கல்யாணி என்ற பெண்ணிடம் இருந்து ஒரு பவுன் தங்கச் செயினும் பறித்துக் கொண்டு, கொள்ளையர்கள் ஓடும் ரயில் இருந்து தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு மற்றும் கோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் செயின்பறிப்பில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Tags:    

Similar News