ராசிபுரம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி ஏலத்தை ரத்து செய்யக்கோரி மனு

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கான ஆன்லைன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2024-10-09 10:00 GMT

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணக்கான ஏலத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ராசிபுரம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிக்கான ஏலத்தை ரத்து செய்யக்கோரி, சசிகலா அணியினர் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கான ஆன்லைன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என என சசிகலா ஆதரவாளர்கள் நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சசிகலா அணி பொறுப்பாளர் கோபால், ராசிபுரம் நகர பொறுப்பாளர் வேல்சாமி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

ராசிபுரம் நகராட்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக, ராசிபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அணைப்பாளையம் பகுதியில், 7 ஏக்கர் நிலம் பஸ் நிலையம் அமைப்பதற்காக, தனியாரிடம் இருந்து தானமாக பெறப்பட்டுள்ளது. ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக சேவை அமைப்புகள், வணிகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 21ம் தேதி ராசிபுரம் புதிய பஸ் நிலைய  கட்டுமானப் பணிக்கான ஆன்லைன் டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாரின் சுய லாபத்திற்காக, ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றம் செய்தால் பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிக்கான ஆன்லைன் ஏலத்தை ரத்து செய்துவிட்டு, பழைய இடத்திலேயே பஸ் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News