நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2021-09-15 09:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கதின் கீழ் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75 வது சுதந்திரன தின விழாவை முன்னிட்டு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரத்தினை பேணுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன எலக்ட்ரானிக் டிஜிட்டல் திரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தூய்மை பாரத இயக்க, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்.2ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் அனைத்து ஊரகப்பகுதிகளிலும் நடைபெறும். விழிப்புணர்வு வாகன பிரசாரத்தின் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் சுகாதார கேடுகள், உடல் நலம் பாதித்தல் குழந்தைகளில் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், மகளிர் மற்றும் கருவுற்ற தாய்மார்களின் உடல் நலனை காத்தல், பெண்கள் சுத்தம் கடைபிடிக்க வீடுகளில் வசதி இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக்குறைவுகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வீட்டிற்கு வீடு கழிப்பறை அவசியம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் இன்பா உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News