நாமக்கல்லில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

Update: 2021-12-01 02:45 GMT

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வாட் வரியைக் குறைக்கக் கோரி நாமக்கல்லில் பா.ஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளபோதிலும், தமிழக அரசு வாட் வரியை குறைக்காததால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அண்டை மாநிலங்களுக்கு இணையாக குறையவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஓ.பி.சி. அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட விவசாய அணி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அமைப்புசாரா பிரிவு மாநில செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய அணியின் மாநில துணை தலைவர் சுரேந்திரரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில பாஜ பிரமுகர்கள் மாட்டு வண்டியில் வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர தலைவர் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் அகிலன், முத்துகுமார், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஹரிஹரன், வர்த்தக அணி தலைவர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News