மின்சாரக் கட்டணம் உயர்வை ரத்து செய்ய கோரி தமாகா சார்பில் கலெக்டரிடம் மனு

தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று தமாகா சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-25 11:15 GMT

கலெக்டர் ஸ்ரேயா சிங்.



இது௩


குறித்து நாமக்கல் மாவட்ட தமிழ்மாநில காங்கிஸ் தலைவர் கோஸ்டல் இளங்கோ, நகர தலைவர் சக்திவெங்கடேஷ் ஆகியோர், நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசுதற்போது, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறுதொழில், குறுந் தொழில்கள் நசிவடைந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைமிகவும் பாதிக்கும். எனவே உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின் துறை அமைச்சர், மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக, மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும், காரணம் சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்தியாக கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News