நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிச.11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

Update: 2021-11-28 04:15 GMT

பைல் படம்.

தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம், திருச்செங்கோடு நீதிமன்றம், பரமத்தி சார்பு நீதிமன்றம் ஆகிய கோர்ட்டுகளில் வருகிற டிச.11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

ஏற்கெனவே கோட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடியவை, செக் சம்மந்தமான வழக்குகள், வங்கி, கல்விக் கடன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், இங்கு முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை அனுகலம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News