நாமக்கல்லில் சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம்

Namakkal District News -நாமக்கல்லில் சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-23 02:17 GMT

பைல் படம்.

Namakkal District News - நாமக்கல் அறிவியல் நிலையத்தில், சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தலைமை வகித்து, சமச்சீர் உரமிடல் மற்றும் பருவகாலங்களுக்கு ஏற்ற வேளாண் காடுகள் அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நாமக்கல் வனத்துறை அலுவலர் பிரியங்கா, வனத்துறையில் உள்ள திட்டங்கள், வேளாண் காடுகள் அமைக்க தேவையான நாற்றங்கால் பராமரித்தல், மரக்கன்று நடுதலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றங்களுக்கேற்ற பயிர்; சாகுபடி முறைகள், வேளாண் மற்றும் இதர துறையில் உள்ள விளைபொருட்களில் மதிப்பு கூட்டுதல், கால்நடை கழிவுகளைக் கொண்டு மண்வளத்தை மேம்படுத்துதல். சமச்சீர் உரமிடுதல், உயிர் உரங்கள் மற்றும் நானோ யூரியா தெளிக்கும் முறைகள், உரப்பாசனம் குறித்து விளக்கினர்.

சமச்சீர் உரமிடல் கருத்தை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட மண் வகைகள், உயிர் உரங்கள், இயற்கை எருக்கள், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள், புண்ணாக்கு வகைகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், ரசாயன உரங்கள், நுண்ணூட்ட வகைகள் குறித்த கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர். மட்கும் கழிவுகளைக் கொண்டு, செறிவூட்டப்பட்ட மட்கும் உரம் தயாரித்தல் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு, மண்வள மற்றும் பாசன நீர் வள அட்டை வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் சத்யா செய்திருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News