நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிசேகம் நடத்த எம்எல்ஏ கோரிக்கை

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிசேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சரிடம் எம்எல்ஏ ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2021-06-12 09:15 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிசேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சரிடம் எம்எல்ஏ ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட் டம் புதுச்சத்திரம் ஒன் றியம் நைனாமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரத ராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு புதிதாக மலைப்பாதை அமைக் கும் பணி துவக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.பக்தர்களின் நன்மை கருதி இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மோகனூரில் காந்த மலை அடிவாரத் திலுள்ள முருகன் கோயி லில் பல ஆண்டுகளாக கும்பாபிசேகம் நடத்தப்படாமல் உள்ளது. அப்பகுதி பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விரைவாக கும்பாபிசேக விழா நடத்த ஏற் பாடு செய்ய வேண்டும். உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெற்று பல ஆண்டு கள் ஆகிவிட்டது. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிசேகம் நடத்த ஏற் பாடு செய்யவேண்டும் என அந்த மனுவில் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர்சேகர் பாபு எம்எல்ஏவின் கோரிக் கையை விரைவாக நிறை வேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாநில திமுக விவசாய தொழிலாளரணி இணைச் செயலாளர் கைலாசம் உட னிருந்தார்.

Tags:    

Similar News