நாமக்கல்லில் கொரோனா விழிப்பணர்வு சைக்கிள் பேரணி; துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-01 12:30 GMT

நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார். அருகில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர் பிரச்சாரத்தை இயகி வைத்து சிடி வெளியிட்டுள்ளார்.

மேலும், மாவட்டந்தோறும் ஆக.1முதல் 7ம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி நாமக்கல்லில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில், கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். மோகனூர் ரோடு, பரமத்தி ÷ ராடு, உழவர் சந்தை, கோட்டை ரோடு, சேலம் ரோடு வழியாக சென்ற பேரணி முருகன் கோயில் அருகில் முடிவடைந்தது.

வழியில் பொதுமக்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வ துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி சார்பில், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

பேரணியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம், பிஆர்ஓ சீனிவாசன், நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் ரங்கநாதன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News