நாமக்கல் மாவட்டத்தில் 38 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள்

நாமக்கல் கோட்டத்தில் 38 தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

Update: 2021-08-07 10:45 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது:

தபால் அலுலகங்களில் நடைபெற்று வரும் சிறப்பு ஆதார் முகாமில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் , பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் பதிவு மற்றும் திருத்தம் முகாம் நடைபெற்று வரும் தபால் அலுவலகங்கள் விபரம்:

நாமக்கல் தலைமை அஞ்சலகம் , திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், கணேசபுரம் , நல்லிபாளையம், நாமக்கல் மாவட்ட நீதி மன்ற வளாக அஞ்சலகம் , எருமப்பட்டி , மோகனூர், மோகனூர் வடக்கு , பாலப்பட்டி, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, வளையப்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வெல்லாண்டி வலசு, சித்தாளந்தூர், எலச்சிபாளையம், கந்தம்பாளையம், குமாரமங்கலம், பரமத்தி, பாண்டமங்கலம், சீத்தாராம்பாளையம், வேலகவுண்டம்பட்டி , ஜேடர்பாளையம், குச்சிபாளையம், சங்ககிரி துர்க் , சங்ககிரி மேற்கு , காளப்பநாயக்கன்பட்டி, முத்துக்காபட்டி, சேந்தமங்கலம், வையப்பமலை, செம்மேடு, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் , பொத்தனூர், வேலூர் , குமாரபாளையம் ஆகிய 36 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் சேவையை பெறலாம்.

கட்டணவிபரம்: புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை, 5 வயது மற்றும் 15 வயது முடிந்து தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழிகளை புதிதாக பதிவுசெய்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. மற்ற வயதினர்களுக்கு ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இமெயில் சேர்த்தல் போன்ற திருத்தம் செய்ய வேண்டுபவர்கள் ரூ.50/- செலுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தொலைபேசி எண் மற்றும் இமெயில் திருத்தம் செய்ய துணை ஆவணங்கள் ஏதும் தேவையில்லை பிற திருத்தங்களை மேற்கொள்பவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வரவேண்டும். தேவையான பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அனுகி சேவையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News