மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி புதன்சந்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-01 10:45 GMT

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி புதன்சந்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும், உணவுப் பொருட்கள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரியும், நாமக்கல் மாவட்டம் புதன் சந்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசு, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெள்ளம், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுகளால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் உணவுப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இவ்வரிவிதிப்பு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்கும். எனவே மத்திய அரசு உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள மின் க ட்டண உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின் கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் பிரதேச குழு உறுப்பினர் நாகேஷ் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி, கிளைச் செயலாளர்கள் விவேகானந்தன், நடேசன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News