புயல் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (9-12-22) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-08 15:15 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை மற்றும் நாமக்கல் என 20 மாவட்டங்ளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, மாண்டஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை டிச. 9ம் தேதி மிக கனமழை பெய்யும் எனவும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், நாளை (9-12-22) வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News