நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டில் குடிமகன்கள் குஷி : ரூ.8.73 கோடி மது விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் குடிமகன்கள் குஷியாக புத்தாண்டு கொண்டாடியதால், டாஸ்மாக் கடைகளில் ரூ. 8.73 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானது.

Update: 2024-01-02 15:30 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் குடிமகன்கள் குஷியாக புத்தாண்டு கொண்டாடியதால், டாஸ்மாக் கடைகளில் ரூ. 8.73 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை ஆனது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள், சமூக சேவை சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், புத்தாண்டு இரவு அன்று விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. கொண்டாட்டத்தில் மது பிரியர்கள் வழக்கத்தை விட கூடுதலாக மது பானங்களை அருந்தி உற்சாகத்தில் திளைப்பார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான 167 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில், டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மது விற்பனை நடப்பது வழக்கம். அதற்காக, டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு மதுபாட்டில்களை இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அதன்படி, இந்த ஆண்டு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மது பிரியர்கள், கடந்த 31ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். குறிப்பாக, புத்தாண்டு பிறப்பதற்கு, முதல் நாள் டிச. 31ம் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 31ம் தேதி ரூ. 4.98 கோடி, ஆங்கில புத்தாண்டு அன்று ரூ. 3.75 கோடி என, இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 8.73 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பைனயானது என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News