நாமக்கல்லில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சாகுபடி இலவச பயிற்சி

Free Training -நாமக்கல்லில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சாகுபடி இலவச பயிற்சி வகுப்பு வருகிற 27ம் தேதி நடத்தப்பட உள்ளது.

Update: 2022-09-22 01:59 GMT

பைல் படம்.

Free Training -நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கால்நடைகளுக்கான பசுந்தீவனம் சாகுபடி முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பசுந்தீவனத்தின் முக்கியத்துவம், பசுந்தீவன வகைகள், தானிய வகை, புல்வகை, பயறு வகை மற்றும் மர வகை தீவனப்பயிர் சாகுபடி முறைகள், ஊறுகாய் புல் தயாரிக்கும் முறைகள், அசோலா உற்பத்தி முறைகள் மற்றும் 10 செண்ட் மாதிரியில் பசுந்தீவன உற்பத்தி முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று வேளாண் அறிவியல் நிலையத்தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News