கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை-சிகிச்சை

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-10-23 23:30 GMT

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கொரேனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, செயலாளர் அருள் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில்நாளை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் கொரோன முதல் மற்றும் இரண்டாம் தவணை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும். மேலும் சங்க உறுபினர்கள், குடும்பத்தினர் மற்றும் டிரைவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முகாமில் கழுத்துவலி, துகுவலி, மூட்டுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, போன்றவைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். மேலும், கண்பரிசோதனை, சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு உடல் பருமன் குறைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். லாரி, ட்ரெய்லர், எல்பிஜி சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News