நாமக்கல் நகராட்சியில் ஏப். 30க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளவர்கள் ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகிறது.

Update: 2023-04-20 10:30 GMT

நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளவர்கள் ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-ல், கடந்த 2022ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13ம் தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 84 (1)ன்படி, சொத்து உரிமையாளர் தங்களது 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30ம் தேதிக்குள் செலுத்தினால், சொத்து உரிமையாளர்கள் 5 சதவீதம் ஊக்கத்தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பெறலாம்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் வீடுகள் மற்றும் நிலங்கள் வைத்திருப்பவர்கள், தங்களின் 2023-204ம் ஆண்டிற்கான சொத்து வரியை, இம்மாதம் 30ம் தேதிக்குள் செலுத்தினால், அவர்களுக்கு மொத்த வரியில் 5 சதவீதம் தள்ளுபடி (ஊக்கத்தொகை) வழங்கப்படும். நாமக்கல் நகராட்சி வரி வசூல் மையங்களிலும், நகராட்சி வரி வசூல் அலுவலர்களிடமும் பொதுமக்கள் சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம்.

அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் முன்னதாகவே வரி செலுத்தி நகராட்சி மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News