பள்ளிபாளையம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனை: ரூ.3 லட்சம் ரொக்கம் பிடிபட்டது

பள்ளிபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டுசெல்லப்பட்டரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-30 04:15 GMT

மாதிரி படம் 

நமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களிலும், அதைச்சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் மெயின்ரொடு பகுதியில், கைத்தறி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில், பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது, பழனிசாமி மற்றும் தியானேஸ்வரன் ஆகியோர் ஒரு காரில் அவ்வழியாக வந்தனர். அந்த காரை நிறுத்தி, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் எவ்வித ஆவனமும் இன்றி ரூ.3 லட்சம் ரொக்கம் எடுத்துச்செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரொக்கப்பணம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு திருச்செங்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பணம் எடுத்துச்சென்றவர்கள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, பறிமுதல் செய்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News