நாமக்கல் உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு காய்கறி கண்காட்சி

நாமக்கல் உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு காய்கறி கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது.

Update: 2024-04-15 09:40 GMT

நாமக்கல் உழவர் சந்தையில் அமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை தேர்தல் பொது பார்வையாளர் திறந்து வைத்தார்.

நாமக்கல் உழவர் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியை, தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் திறந்து வைத்தார். 

நாமக்கல் உழவர் சந்தையில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19ம் தேதி நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில், ஓட்டுப்போட தகுதியுடைய அனைவரும், 100 சதவீதம் ஓட்டுப் போடுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 14 லட்சத்து, 32 ஆயிரத்து, 307 வாக்காளர்கள் அனைவரும், ஓட்டுப்போட ஏதுவாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், நாமக்கல் உழவர் சந்தையில், தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். மத்திய தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார். முன்னதாக, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News