நாமக்கல் மகளிர் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-12-23 05:45 GMT

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கில் ஐஎம்ஏ மகளிர் மேம்பாட்டுக்குழு தலைவர் டார்டர் மல்லிகா பேசினார்.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல், மேகனூர் ரோட்டில் உள்ள டிரினிடி நகரில், டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வஅகிறது. இந்த கல்லூரியின் போதை எதிர்ப்பு மையத்தின் சார்பில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் செங்கோடன் வரவேற்றர். செயலாளர் தென்பாண்டியன் நல்லுசாமி, செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேசுவரன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். நாமக்கல் புகையிலை மையத்தின் ஆலோசகர் லலிதா, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் வெஸ்லி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். ஐஎம்ஏ மகளிர் மேம்பாட்டு குழுவின் தலைவரும், நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் இண நிர்வாக இயக்குனருமான டாக்டர் மல்லிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது;

உலகில் 2.30 கோடி மக்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை உட்கொள்பவர்களின் உடல்நிலை எதிர்காலத்தில் பாதிக்கப்படும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு போதைப்பொருட்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. புகையிலை, கஞ்சா, அபின், மது மற்றும் பல்வேறு வகையான போதை மருந்துகளும் மனித சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் போதோ, தகாத நட்பு, குடும்பப் பிரச்சனை, சமுதாயப் பிரச்சனை, யாரும் கவனிப்பாரற்ற நிலை, அதித பணப்புழக்கம் காரணமாக போதைப் பொருட்களுக்கு சிலர் அடிமையாகிவிடுகின்றனர். போதைப் பொருட்கள் நம்மை அழித்து விடும் குணம் கொண்டது. வீட்டில் யாராவது ஒருவர் போதைப் பொருட்கள் உட்கொண்டால் அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் அதனை பயன்படுத்த தூண்டப்படுவார்கள். பெற்றோர்கள், குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தங்கள் பிள்ளைகள் வீட்டின் வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். போதை இல்லாத சமுதாயம் என்பதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

நாமக்கல் ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன், நாமக்கல் இன்னர்வீல் சங்கத் தலைவர் நிர்மலா, பொது சுகாதார விழிப்புணர்வு மையத்தின் ஆலோசகர் ராஜ்குமார், கல்லூரி போதை எதிர்ப்பு மைய பொறுப்பாளர்கள் ஜெயந்தி, அமுதா, ஜேஆர்சி சங்க பொறுப்பாளர் கலைவாணி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News