நாமக்கல் பொது சுகாதாரத்துறை ஆபீசில் டிரைவர்கள் தின விழா

Update: 2021-09-19 12:30 GMT

நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில், துணை இயக்குனர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற டிரைவர்கள் தின விழாவில் அரசு ஜீப் டிரைவர் முத்துசாமி கேக் வெட்டினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்,  மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் மொத்தம் சுமார் 40க்கும் மேற்பட்ட ஜீப்கள் மற்றும் அரசு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் டிரைவர்களை பாராட்டும் வகையில், டிரைவர்கள் தின விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஜீப் டிரைவர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். உதவி இயக்குனர் நக்கீரன், உதவி திட்ட அலுவலர் மணி, ஜீப் டிரைவர்கள் பாஸ்கர், நல்லுசாமி, அண்ணாதுரை, வேலு, தினேஷ், கிஷோர், செந்தில் மற்றும் துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News