ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து : 29ம் தேதி 10 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 29ம் தேதி 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.;

Update: 2025-03-27 14:40 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல்,

தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 29ம் தேதி 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பகுதிகளில், 10 இடங்களில் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., தலைமை வகிக்கிறார். நாமக்கல் ஒன்றிய திமுக சார்பில், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகிக்கிறார். கொல்லிமலை ஒன்றிய திமுக சார்பில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி தலைமை வகிக்கிறர்.

மோகனூர் ஒன்றியம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், எருமப்பட்டி ஒன்றியம், சேந்தமங்கலம் ஒன்றியம், வெண்ணந்தூர் ஒன்றியம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் ஆர்ப்பாட்டங்களில் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News