நாமக்கல் மாவட்டத்தில் 4ம் தேதி முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Update: 2021-10-02 02:30 GMT

தமிழகத்தில் கெரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் துறை 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் வழங்கினார். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட 301 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு, சம்மந்தப்பட்ட பள்ளிகளில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை முதல் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Tags:    

Similar News