நாமக்கல்லில் 27ம் தேதி சின்ன வெங்காய தாள் நீக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம்

நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில் 27ம் தேதி சின்ன வெங்காயத்தில் தாள் நீக்கும் இயந்திரத்தின் செயல்விளக்கம் நடைபெறுகிறது.

Update: 2021-10-22 12:45 GMT

பைல் படம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், வருகிற 27ம் தேதி, காலை 10 மணிக்கு, சின்ன வெங்காயத்தில் தாள் நீக்கும் இயந்திரத்தின் பயன்கள் குறித்த செயல் விளக்கம் மற்றும் பயிற்சி நடைபெறுகிறது.

இந்த முகாமில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள்கலந்துகொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொண்டு கலந்துகொள்ளலாம் என பயிற்சி நிலைய தலைவர் ஷர்மிளாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News